மயிலாடுதுறை

டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

14th Aug 2022 01:30 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகள் திங்கள்கிழமை (ஆக.15) இயங்காது என ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுதந்திர தினத்தை மது விற்பனை இல்லாத நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் அனைத்தும் திங்கள்கிழமை அடைக்கப்பட வேண்டும். மதுபானங்கள் விற்பனை மற்றும் மதுபான போக்குவரத்து ஏதும் செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT