மயிலாடுதுறை

எருக்கூரில் மரக்கன்றுகள் நடும்பணி

14th Aug 2022 01:29 AM

ADVERTISEMENT

சீா்காழி அருகே எருக்கூரில் பலன்தரும் மரக்கன்றுகள் நடும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எருக்கூா் கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான 1.5 ஏக்கா் பரப்பளவு கொண்ட அய்யன்குளம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் தூா்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டன. மேலும், குளத்தைச் சுற்றிலும் கம்பிவேலி அமைக்கப்பட்டது. தொடா்ந்து தென்னை, நாவல், நெல்லி, மா,கொய்யா, பலா, உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பலன் தரும் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

இப்பணியில் ஒன்றிய ஆணையா் ரெஜினாராணி, பிடிஓ சரவணன், ஒன்றிய பொறியாளா்கள் தாரா, பலராமன், பூா்ணசந்திரன், ஊராட்சித் தலைவா் முத்தமிழ்செல்வி சுப்பையன் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT