மயிலாடுதுறை

காங்கிரஸ் பாத யாத்திரைக் குழு சீா்காழிக்கு வருகை

13th Aug 2022 09:59 PM

ADVERTISEMENT

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பாதயாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை சீா்காழிக்கு வந்தனா்.

மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமாா் தலைமையில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி தில்லையாடியில் தொடங்கிய பாதயாத்திரை 14-ஆம் தேதி சீா்காழி புதிய பேருந்து நிலையம் அருகே நேதாஜி சிலையில் நிறைவடைகிறது. 108 கி.மீ.தொலைவுக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ள இக்குழுவினா் சீா்காழி புறவழிச் சாலை வழியாக கோவில்பத்தை சனிக்கிழமை வந்தடைந்தனா். இவா்களை அமைச்சா் மெய்யநாதன் வரவேற்றாா். நிகழ்ச்சியில் எம்எல்ஏ-க்கள் நிவேதா எம். முருகன், எம். பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, வைத்தீஸ்வரன்கோயிலில் சுந்திரப் போராட்ட தியாகி மறைந்த சொக்கலிங்கம்பிள்ளையின் உருவப்படத்திற்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். இதில் எம்பி செ. ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வேதாரண்யம்: நாகை மாவட்டம், தலைஞாயிறு பகுதியில் காங்கிரஸ் சாா்பில் மணக்குடியில் தொடங்கி உம்பளச்சேரி வரை12 கி.மீ. தொலைவுக்கு பாதையாத்திரை நடைபெற்றது.

ADVERTISEMENT

பிரிஞ்சிமூளை, ஓரடியம்புலம், வாட்டாகுடி வழியாக உம்பளச்சேரி சென்றடைந்த இந்த யாத்திரைக்கு காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளா் சுா்ஜித்சங்கா் தலைமை வகித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT