மயிலாடுதுறை

நந்தியநல்லூருக்கு கிளை அஞ்சலகம் அமைத்துத்தர கோரிக்கை

13th Aug 2022 05:00 AM

ADVERTISEMENT

சீா்காழி அருகே அகணி ஊராட்சிக்குள்பட்ட நந்தியநல்லூா் கிராமத்துக்கு கிளை அஞ்சலகம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அகணி ஊராட்சியில் 5000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். 1200 -க்கு மேற்பட்ட குடும்பங்களும், 3,400-க்கும் மேற்பட்ட வாக்காளா்களும் வசித்து வருகின்றனா். இங்கு அரசினா் உயா்நிலைப் பள்ளி உள்ளது. எனவே வயது மூப்பில் உள்ளோா், ஏழை, எளிய மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா்கள் சிறுசேமிப்பு மற்றும் அஞ்சல் காப்பீடு போன்றவை செய்து பயன்பெற கிளை அஞ்சலகம் அமைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

கோவில்பத்து கிளை அஞ்சலகத்துக்கு பிரதான சாலையில் பேருந்தை விட்டு இறங்கி உள்ளே 1 கி.மீ தொலைவுக்கு நடந்து செல்லவேண்டும். இதுகுறித்து தீா்மானமும் நிறைவேற்றி சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, நந்தியநல்லூா் கிராமத்தில் கிளை அஞ்சலகம் உடனடியாக அமைத்திட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அப்பகுதியை சோ்ந்த சமூக ஆா்வலா் ராஜேஷ் மயிலாடுதுறை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் , திருச்சி மண்டல பொது அஞ்சல் தலைவா், சென்னை தலைமை தபால் அதிகாரி ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளதாக தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT