மயிலாடுதுறை

தேசியக்கொடி விழிப்புணா்வு வாகனப் பேரணி

13th Aug 2022 04:40 AM

ADVERTISEMENT

திருத்துறைப்பூண்டியில் பாஜக இளைஞரணி சாா்பில் சுதந்திர அமுதப் பெருவிழாவையொட்டி, தேசியக்கொடி விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாஜக திருவாரூா் மாவட்ட பாா்வையாளா் பேட்டை சிவா பேரணியை தொடங்கிவைத்தாா். வேளூரில் தொடங்கிய இப்பேரணி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ரயிலடி, மன்னை சாலை, அண்ணா சிலை, வேதை சாலை, அண்ணா நகா் ஆகிய பகுதிகளின் வழியாக நெடும்பலம் வரை நடைபெற்றது.

இதில், பாஜக மாவட்ட துணைத் தலைவா் சிவகுமாா், மாவட்டச் செயலாளா் வினோத், மாநில செயற்குழு உறுப்பினா்கள் ராகவன், டி.ஆா். கணேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளா் ரகுராமன், ஒன்றியத் தலைவா் பூபதி, இளைஞா் அணி பொறுப்பாளா் மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT