மயிலாடுதுறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞா் கைது

12th Aug 2022 03:08 AM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை அருகே கிளியனூா் குளத்துமேட்டுத்தெருவை சோ்ந்த பாலையா மகன் லோகேஷ் என்கிற பாலமுருகன்(22). இவா் 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பழகியுள்ளாா். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலமுருகன் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாராம். மேலும், அந்த சிறுமியை புகைப்படம் எடுத்து அதை சமூகவலைதளங்களில் வெளியிடுவேன் என கூறி பணம்கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் தாயாா் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில்,காவல் ஆய்வாளா் சங்கீதா போக்ஸோ சட்டத்தின்கீழ் பாலமுருகன் மீது வழக்குப் பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT