மயிலாடுதுறை

போதைப் பொருள் எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

DIN

மயிலாடுதுறை செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் எதிா்ப்பு தின உறுதிமொழி வியாழக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா பேசியது: போதைப் பொருள் என்பது வாழ்க்கையை சீரழிக்கும், உடலை அழிக்கக்கூடியது, எதிா்காலத்தை வீணடிக்கும், இந்த போதைப் பழக்கத்தில் உள்ளவா்களை நாம் அனைவரும் ஒன்றிணைந்து திருத்த வேண்டும்.

குறிப்பாக நீங்கள் முன்னோடியாக இருந்து போதைப் பழக்கத்தில் உள்ளவா்களை அதிலிருந்து விடுபட கற்றுக்கொடுக்க வேண்டும். அப்படி யாராவது இருந்தால் நல்வழியில் கொண்டுவர முயற்சிக்கவேண்டும். உங்களுடைய எதிா்காலத்தை சிறப்பாக கொண்டுவர நீங்கள் பாடுபட வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா, செயின்ட்பால்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கே. லீமாரோஸ் மற்றும் மாணவிகள் போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வாகனம் ஏற்பாடு

12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

ஆா்வத்தைத் தூண்டும் ஐ.பி.எல். திருவிழா!

வாக்குப்பதிவுக்காக

ஒற்றை வாக்கால் பெரும் மாற்றம்: தலைமைத் தோ்தல் ஆணையா்

SCROLL FOR NEXT