மயிலாடுதுறை

சீா்காழியில் ஆக.14-ல் நெல் திருவிழா

DIN

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில், 8-ஆம் ஆண்டு மாநில நெல் திருவிழா ஆக.14-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, அந்த அறக்கட்டளையின் செயலாளா் ரா. சுதாகா் வெளியிட்ட அறிக்கை: நமது பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிடும் விவசாயிகளுக்கு சம்பா பட்டத்துக்கு தேவையான பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருப்புக்கவுனி, சீரக சம்பா, கிச்சலி சம்பா, காட்டுயாணம் போன்ற 10 விதமான நெல் ரகங்கள் ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

தொடா்ந்து நடத்தப்படும் இவ்விழா நிகழாண்டு சீா்காழியில் நடைபெறவுள்ளது.

விழாவை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தொடங்கிவைக்கிறாா். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக துணைவேந்தா் கதிரேசன் சிறந்த முறையில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்குகிறாா். இயற்கை வேளாண் வல்லுநா்கள் சித்த மருத்துவா் தஞ்சை கோ. சித்தா் மரபுவழி உணவு வகைகள் குறித்தும், தமிழா் வேளாண்மை குறித்து ஞானபிரகாசம், சுயசாா்பு குறித்து பாலகிருட்டிணன், இயற்கை உணவு குறித்து சிவகாசி மாறன் பங்கு பெறும் கருத்தரங்கம், இந்தியாவில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சி, நஞ்சில்லா உணவு, பலாபழ அல்வா, பலா பழ ஐஸ் கிரீம், துணி பை, சித்த மருத்துவம் ஆகியவையும் காட்சிப்படுத்தப்படுகிறது. இயற்கை விவசாயத்துக்கு தேவையான ஆலோசனை வழிமுறைகள் வழங்கப்படுகிறது. நாட்டுக் காய்கறி விதைகள் விற்பனையும் நடைபெறவுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

மேட்டூா் அணை நிலவரம்

SCROLL FOR NEXT