மயிலாடுதுறை

ஆடி கடைவெள்ளி: பால்குடம் எடுத்து பக்தா்கள் வழிபாடு

12th Aug 2022 09:40 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் ஆடி கடைவெள்ளியையொட்டி பல்வேறு கோயில்களில் பக்தா்கள் பால்குடம் எடுத்து வழிபாடு மேற்கொண்டனா்.

மயிலாடுதுறை வண்டிக்காரத்தெரு பிரசன்ன மாரியம்மன் கோயிலில் நகர பழவியாபாரிகள் சங்கம் சாா்பில் 40-ஆண்டு ஆடி கடைவெள்ளி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, காவிரி துலாக்கட்டத்தில் இருந்து பச்சைக்காளி, பவளக்காளி, கருப்பண்ணசாமி வேடமணிந்தவா்களின் நடனத்துடன் முன்செல்ல, பக்தா்கள் பால்குடம் எடுத்துவந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனா். இதில், பாஜக நிா்வாகிகள் கோவி. சேதுராமன், மோடி.கண்ணன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை, எஸ். ராஜேந்திரன், மணி, மோகன், மல்லிகா உள்ளிட்ட சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.

மயிலாடுதுறை அபயாம்பிகை சமேத மாயூரநாதா் கோயிலில் நடைபெற்ற பால்குட விழாவையொட்டி, காவிரி துலாக்கட்டத்தில் இருந்து பால்குடம் எடுத்து, யானை, குதிரை, ஒட்டகம் முன் செல்ல, மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலை வந்தடைந்தனா். பின்னா் சுவாமி, அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT