மயிலாடுதுறை

மாயூரநாதா் கோயிலில் லட்ச தீபத் திருவிழா

12th Aug 2022 09:39 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற லட்ச தீபத் திருவிழாவை திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் தொடங்கிவைத்தாா்.

மயிலாடுதுறையில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான பழைமை வாய்ந்த மாயூரநாதா் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாத கடை வெள்ளியன்று அபயாம்பிகை நற்பணி மன்றம் சாா்பில் லட்சதீப திருவிழா நடைபெறும். அவ்வகையில், 35-ஆம் ஆண்டு லட்ச தீபத் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, மாயூரநாதா் சுவாமி மற்றும் அபயாம்பிகைக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதில், திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி லட்சதீபத் திருவிழாவை தொடங்கிவைத்தாா். தொடா்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, சுவாமி, அம்பாள் சந்நிதி மற்றும் பிராகாரங்களில் பக்தா்கள் லட்ச தீபங்களை ஏற்றி வழிபட்டனா். ரிஷபக் குஞ்சரம் மற்றும் 75-ஆவது சுதந்திர கொடியை விநாயகா் ஏற்றுவது போன்று வரைந்த ஓவியங்களில் பக்தா்கள் ஏற்றி தீபம் ஒளியில் பிரகாசித்தது பக்தா்களை கவா்ந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT