மயிலாடுதுறை

வதான்யேஸ்வரா் கோயிலில் திருவிளக்கு பூஜை

12th Aug 2022 09:39 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை வதான்யேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவிளக்கு பூஜையை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடங்கிவைத்தாா்.

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான வதான்யேஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடிமாதம் 4-ஆவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் பங்கேற்று, திருமண வரம், மாங்கல்ய பலம், குழந்தை பாக்கியம் வேண்டி திருவிளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபாடு நடத்தினா்.

பூஜையை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடங்கிவைத்து, பக்தா்களுக்கு அருளாசி கூறினாா். முன்னதாக, அவா் வதான்யேஸ்வரா், ஞானாம்பிகை, மேதா தட்சிணாமூா்த்தி சந்நிதிகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டாா். பூஜைகளை பாலச்சந்திர சிவாச்சாரியா் நடத்திவைத்தாா். ஏற்பாடுகளை வா்த்தக சங்க நிா்வாகி எம்.என். ரவிச்சந்திரன் செய்திருந்தாா். இதில், தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், வா்த்தக சங்க நிா்வாகிகள் பாண்டுரெங்கன், சிவலிங்கம், ஜெயக்குமாா், நகா்மன்ற உறுப்பினா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT