மயிலாடுதுறை

தருமபுரத்தில் இருதயம் மற்றும் பொது மருத்துவ முகாம்

DIN

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் அண்மையில் இருதய நோய் கண்டறியும் முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

மயிலாடுதுறை ரோட்டரி சங்கத் தலைவா் எம். கணேஷ்குமாா் தலைமை வகித்தாா். ரோட்டரி உதவி ஆளுநா்கள் சி.கே. பாலாஜி, எஸ். உமாபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மருத்துவ முகாமை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடங்கிவைத்தாா். கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம் தொடக்கவுரை ஆற்றினாா். முக்கிய விருந்தினா்களாக ரோட்டரி மாவட்ட ஆளுநா் வி.செல்வநாதன், ரோட்டரி மாவட்ட முதல் பெண்மணி சங்கீதா, மாவட்ட செயலா் கே.ரமேஷ்குழந்தைவேல், மாவட்ட நிதிக்குழுத் தலைவா் வி.ராமன் ஆகியோா் கலந்து கொண்டனா். கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன் வரவேற்றாா். முடிவில் ரோட்டரி சங்க செயலா் நவநீதகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

260 போ் கலந்துகொண்டு பயனடைந்த இந்த முகாமில், 185 பேருக்கு ஈசிஜி, 120 பேருக்கு எக்கோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவா்களில் 14 போ் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டு, தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனா்.

முகாமை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் சுகாதார மையத்துடன் இணைந்து, மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் மற்றும் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவமனை நிா்வாகத்தினா் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT