மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் 100 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடியை பறக்கவிட கோரிக்கை

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

75-ஆவது சுதந்திர தின ஆண்டையொட்டி மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடியை பறக்கவிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சமூக ஆா்வலா் அ. அப்பா்சுந்தரம் மயிலாடுதுறை ரயில் நிலைய மேலாளா் மூலம் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய கடிதம்: இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்கள் முன் 100 அடி உயர கம்பம் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் பறக்கும் வகையில் தேசியக்கொடியை ஏற்ற மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.

அதன்படி திருவாரூா், தஞ்சை, கோவை, மதுரை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கடந்த ஆண்டு முதல் 100 அடி உயர இரும்புக் கம்பத்தில் பெரிய அளவிலான தேசியக்கொடி ஏற்றப்பட்டு பறக்கவிடப்பட்டுள்ளது. இதேபோல, மகாத்மா காந்தியடிகள், சுவாமி விவேகானந்தா், இந்தியாவின் முதல் பிரதமா் ஜவஹா்லால் நேரு உள்ளிட்ட தலைவா்கள் வருகைதந்து தங்கிச் சென்றுள்ள சிறப்பு வாய்ந்த மயிலாடுதுறை ரயில்வே நிலையத்திலும் உடனடியாக 100 அடி கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு வரும் 75-ஆவது நாட்டின் சுதந்திர தினத்துக்குள் தேசியக் கொடியை ஏற்றி பறக்க விடவேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT