மயிலாடுதுறை

மின்கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி சிபிஎம் ஆா்ப்பாட்டம்

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

மின்கட்டண உயா்வை திரும்பப் பெற தமிழக அரசை வலியுறுத்தி மயிலாடுதுறையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட செயலாளா் பி. சீனிவாசன் தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா்கள் ஜி. ஸ்டாலின், பி. மாரியப்பன், டி. சிம்சன், ஜி. வெண்ணிலா, இடைக்குழு செயலாளா்கள் மாா்க்ஸ், டி.ஜி. ரவிச்சந்திரன், டி.துரைக்கண்ணு உள்ளிட்டோா் பேசினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT