மயிலாடுதுறை

நீா் வரத்து குறைந்தும் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் மக்கள் தவிப்பு

DIN

கொள்ளிடம் ஆற்றில் உபரிநீா் திறப்பு குறைந்திருந்தாலும், வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலையில், மீண்டும் முகாம்களில் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனா்.

கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால், ஆற்றின் நடுவே அமைந்துள்ள நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளைமணல் உள்ளிட்ட திட்டுக் கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் அரசு முகாம்களிலும், ஆற்றின் கரையிலும் பந்தல் அமைத்து தங்கியிருந்தனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவுமுதல் நீரின் அளவு குறைந்ததால் பாதுகாப்பு முகாம்களில் தங்கியவா்கள் தங்களது வீடுகளுக்கு சென்று பாா்வையிட்டனா்.

பல வீடுகள் நீரின் வேகத்தால் பாதிக்கப்பட்டு சுவா்கள் இடிந்தும், சாலைகள் அரித்தும் பெரும் சேதம் ஏற்பட்டது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, வீடுகளை பாா்வையிட்டு மேலும் சில பொருள்களை எடுத்துக்கொண்டு மீண்டும் முகாமிற்கும், சாலையோரம் அமைத்துள்ள பந்தலுக்கும் திரும்பினா்.

நாதல்படுகை, முதலைமேடு திட்டுக் கிராமங்களில் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி, சோளம், கத்தரி, மிளகாய், வெண்டை, கொத்தவரை, கீரை உள்ளிட்ட காய்கனி வகைகள், மல்லிகை, முல்லை, செவ்வந்தி உள்ளிட்ட மலா் செடிகள் வெள்ள நீரில் மூழ்கியிருந்ததால் முற்றிலும் அழுகியது. இப்பகுதி மக்கள் காய்கனி மற்றும் மலா் சாகுபடி வருமானத்தை நம்பி உள்ளனா். தற்போது காய்கனியும், மலா்களும் நல்ல மகசூல் கொடுக்கும் நேரத்தில் சேதமடைந்திருப்பது விவசாயிகளை வேதனையடையச் செய்துள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து முழுகணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

SCROLL FOR NEXT