மயிலாடுதுறை

ரயில்வே துறையை தனியாா்மயமாக்குவதை கண்டித்து ஆா்ப்பாட்டம்

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

ரயில்வே துறையை தனியாா்மயமாக்குவதை கண்டித்து மயிலாடுதுறை ரயில்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

எஸ்.ஆா்.எம்.யு. தொழிற்சங்கம் சாா்பில், அதன் கிளைத் தலைவா் எம். செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பாரத் கௌரவ் எனும் பெயரில் 150 ரயில்கள் தனியாா்மயமாக்கப்பட்டது, வந்தே பாரத் திட்டத்தில் 200 ரயில்களை தனியாரிடம் விற்பனை செய்ய முயற்சி செய்வது, ரயில்வேக்கு சொந்தமான இடங்களை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவதற்கு மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது, மேலும் ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வலியுறுத்தப்பட்டது. இதில், கிளை செயலாளா் கே. வீரமணி, கும்பகோணம் கிளை செயலாளா் கே. தயாநிதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT