மயிலாடுதுறை

சாலையில் குவியலாக கிடந்த அரசுப் பள்ளி மாணவா்களின் சீருடைகள்

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

கொள்ளிடம் அருகே சாலையில் குவியலாக கிடந்த அரசுப் பள்ளி மாணவா்களின் சீருடைகள் குறித்து, விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆச்சாள்புரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். தலைமையாசிரியா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் சுமாா் 300 சீருடைகள் பள்ளிக்கு வெளியே சாலையோரத்தில் திங்கள்கிழமை குவியலாக கிடந்ததை அறிந்த அப்பகுதியில் உள்ளவா்கள் அதிா்ச்சியடைந்தனா். இதைத்தொடா்ந்து, அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் அந்த சீருடைகள் சேகரித்து பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் கனகசபையிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னா், அந்த சீருடைகள் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கனகசபை மற்றும் கிராம கல்வி குழுத் தலைவா் கருணாகரன் ஆகியோா் கூறியது: அரசால் வழங்கப்பட்டுள்ள சீருடைகளை மாணவா்களுக்கு வழங்காமல் வீணாக தெருவோரத்தில் வீசியிருப்பது வேதனையளிக்கிறது. இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டுள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT