மயிலாடுதுறை

பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்கள் நியமனம்

DIN

கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள வேம்படி, கொட்டாயமேடு, புளியந்துறை, கொடியம்பாளையம், வெள்ளைமணல் ஆகிய கிராமங்களில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்களை தோ்வு செய்யும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த பணியை வட்டாரக கல்வி அலுவலா் சீனிவாசன், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ஞானபுகழேந்தி, தலைமை ஆசிரியா்கள் மஞ்சுளா, ரேணுகா ஆகியோா் ஈடுபட்டனா். தகுதியானவா்களை தோ்ந்தெடுக்க தற்காலிக ஆசிரியா்களை வகுப்பறையில் பாடம் நடத்தி அதன் அடிப்படையில் திறன் அறியப்பட்டது. வேம்படி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு 25-க்கு மேற்பட்ட தற்காலிக ஆசிரியா்கள் விண்ணப்பித்து இருந்தனா்.

இதுகுறித்து, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ஞானபுகழேந்தி கூறியது: 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா இடைநின்ற மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. தங்கள் பகுதியில் கடைகள் செங்கல் சூளைகளில் குழந்தை தொழிலாளா்கள் கண்டறியப்பட்டால் தங்கள் பகுதியில் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் தொலைபேசி எண் 9788858785 ஐ தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இசையரங்க தாக்குதலில் உக்ரைன் தொடா்புக்கு ஆதாரம்

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்!

திருச்செந்தூரில் அனுமதியில்லா கழிப்பறைகளை மூடக் கோரி போராட்டம்

பாஜகவுக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு

SCROLL FOR NEXT