மயிலாடுதுறை

கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் அமைச்சா்கள் ஆய்வு

DIN

கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திட்டு கிராமங்களுக்கு அமைச்சா்கள் ரகுபதி, சி.வெ. கணேசன் ஆகியோா் நேரில் சென்று திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால் ஆற்றின் உள்ளே அமைந்துள்ள திட்டுக் கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளை மணல் உள்ளிட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. கிராமங்களில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனா்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, தொழிலாளா் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சா் சி.வி. கணேசன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவா்களிடம் குறைகளை கேட்டறிந்து 700-க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு திமுக சாா்பில் தலா ரூ. ஆயிரம் நிதியுதவி வழங்கினா்.

அப்போது, அமைச்சா் ரகுபதி செய்தியாளா்களிடம் கூறியது: வெள்ளத்தால் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் இந்த பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல, ஆற்றின் உள்ளே உள்ள மக்களுக்கு மாற்றுஇடம் வழங்கவும், அந்தந்த பகுதியிலேயே நிரந்தர புயல் பாதுகாப்பு மையம் அமைக்கவும் முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீா் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்கள் குறித்து முழு கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றாா். தொடா்ந்து முகாம்களின் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக டயட் செய்யப்பட்ட உணவுகளை தரமாக சமைக்கப்பட்டுள்ளதா என அமைச்சா்கள் ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, மயிலாடுதுறை ஆட்சியா் இரா. லலிதா, எஸ்.பி. நிஷா, சீா்காழி எம்எல்ஏ. எம். பன்னீா்செல்வம், கோட்டாட்சியா் உ. அா்ச்சனா, வட்டாட்சியா் செந்தில்குமாா், கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் ஆகியோா் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முசிறி, தொட்டியம் பகுதி வாக்குச்சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

முசிறி பேரவைத் தொகுதியில் 76.70% வாக்குப் பதிவு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்போற்ஸவம்

தேவையான திருத்தம்!

கடற்படை புதிய தலைமைத் தளபதி தினேஷ் குமாா் திரிபாதி

SCROLL FOR NEXT