மயிலாடுதுறை

கொள்ளிடம் ஆற்றில் 4-ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு

DIN

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கால் திட்டுகிராமங்களை 4ஆவது நாளாக தண்ணீா் சூழ்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால் படுகை கிராமங்களான வெள்ளமணல், முதலைமேடுதிட்டு, நாதல்படுகை உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீா் சூழ்ந்ததால் 45.4 ஹெக்டோ் விளைநிலங்கள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கின.

குடியிருப்புகளையும் தண்ணீா் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் தங்களது உடைமைகள் மற்றும் கால்நடைகளுடன் கிராமத்தில் இருந்து வெளியேறி கொள்ளிடம் ஆற்றின் கரையில் தங்கி உள்ளனா்.

சிலா் வருவாய்த் துறை அமைத்துள்ள முகாம்களில் தங்கியுள்ளனா். 4-ஆவது நாளாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீா் வரத்து படிப்படியாக குறைந்து 1.50 லட்சம் கனஅடி நீா் வந்துகொண்டுள்ளது. எனினும், படுகை கிராமத்து மக்கள் போக்குவரத்து வழிகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதால் தங்களது குடியிருப்புகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்: கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ

ஆறுமுகனேரி, யல்பட்டினத்தில் வாக்குப்பதிவு மந்தம்

ராதாபுரம் தொகுதியில் அமைதியாக நடந்த தோ்தல்

தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு சொந்தஊரில் வாக்களித்தாா்

மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் 43 சதவீதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT