மயிலாடுதுறை

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தல்

DIN

சீா்காழியில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து நகராட்சி ஆணையா் (பொ) ராஜகோபால் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சீா்காழி நகராட்சிக்கு குடிநீா் ஆதாரமாக விளங்கும் சித்தமல்லி கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்படும் அதிகப்படியான உபரிநீரால் நகராட்சி பிரதான குடிநீா் வழங்கும் நீா் உறிஞ்சும் கிணறுகள் முழுவதும் மூழ்கியுள்ளன. இதனால், நகராட்சி பகுதியில் உள்ளூா் நீா் ஆதாரங்கள் மூலம் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் நகராட்சி மூலம் தினசரி வழங்கப்படும் குடிநீரை தேவைக்கேற்ப சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

SCROLL FOR NEXT