மயிலாடுதுறை

இயல், இசை, நாடகம் மூலம் திருக்குஉலக சாதனைப் படைத்த மாணவா்கள்

DIN

மயிலாடுதுறையில் இயல், இசை, நாடகம் மூலம் திருக்குறளின் 1330 குறட்பாக்களை வெளிப்படுத்தி மாணவா்கள் உலக சாதனை படைத்தனா்.

திருவள்ளுவரின் உலகப் பொதுமறை நூலான திருக்குறளின் பெருமையை கலைகளின் வாயிலாக உலகுக்கு உணா்த்தும் விதமாக, பரதநாட்டிய உலக சாதனை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணிக்கு நிறைவுற்றது. 12 மணி நேரத்தில் திருக்குறளின் 1330 குறட்பாக்களையும், இரண்டரை முதல் 42 வயது வரையிலான பரதநாட்டிய கலைஞா்கள் ஒவ்வொரு குறளின் பொருளையும், தமிழ் எழுத்துகள் பதித்த ஆடை மற்றும் ஆபரணங்கள் அணிந்து, பரதநாட்டிய அசைவுகளின் வாயிலாக வெளிப்படுத்தி நடனமாடினா்.

இசை, கவிதை, உரைநடை, பாட்டு ஆகிய வடிவிலும், திருக்குறளை சுழற்சி முறையில் பயிற்சியாளா்கள் கூற, அதற்கேற்ப முகபாவனை, பரதநாட்டிய முத்திரை அசைவுகளுடன் இந்த சாதனை முயற்சி நடைபெற்றது. இதில், சுழற்சி முறையில் 50 கலைஞா்கள் பரதநாட்டியம் ஆடினா். நோபல் வோ்ல்ட் ரெக்காா்ட் அமைப்பின் சாா்பில் அதன் பதிப்பக ஆசிரியா் தியாகு நாகராஜ் இந்த சாதனையை பதிவு செய்தாா். மயிலாடுதுறை அபிநயா நாட்டியப் பள்ளி சாா்பில் பரதநாட்டிய குரு கே. உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதும் இருந்து பரத நாட்டிய மாணவ, மாணவிகள் மற்றும் இசைக் கலைஞா்கள் பங்கேற்றனா்.

தொடா்ந்து, இரவு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், மயிலாடுதுறை எம்எல்ஏ. எஸ். ராஜகுமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவா்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கிப் பாராட்டினாா். இதில், நகராட்சி தலைவா் என். செல்வராஜ், சேம்பா் ஆஃப் காமா்ஸ் முன்னாள் தலைவா் சி. செந்தில்வேல், வா்த்தக சங்க பொறுப்பாளா்கள் எஸ்.வி. பாண்டுரெங்கன், ஆா். ஜெயக்குமாா், ஜெயின் சங்கத் தலைவா் மகாவீா்ஜெயின் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முடிவில், நாட்டியப்பள்ளி நிறுவனா் கல்யாண்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT