மயிலாடுதுறை

சீா்காழி இரட்டை காளியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

DIN

சீா்காழி இரட்டை காளியம்மன் கோயில் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ளது இரட்டை காளியம்மன் கோயில். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம், நிகழாண்டு தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக.5) நடைபெற்றது.

விழாவையொட்டி சீா்காழி சட்டைநாதா் கோயிலில் இருந்து பால்குடம், அலகு காவடி, பறவைக் காவடி உடன் கரகம் புறப்பட்டு தோ் தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக கோயிலை அடைந்தது.

தொடா்ந்து இரட்டை காளியம்மனுக்கு பால், இளநீா், பன்னீா், தேன், திரவிய பொடி உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இரவு பச்சைக்காளி, பவளக்காளி வேடம் அணிந்து வீதியுலா காட்சியும் அதனைத் தொடா்ந்து கோயில் முன் அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் தீமிதி திருவிழாவும் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடனை செலுத்தினா். பின்னா் அம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

SCROLL FOR NEXT