மயிலாடுதுறை

அனைத்து விடுதிகளும் உரிமம் பெற வேண்டும்: ஆட்சியா்

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து விடுதிகளும் ஒரு வாரத்துக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கருத்துரு சமா்ப்பித்து உரிமம் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் மகளிா் மற்றும் குழந்தைகளுக்கான நிரந்தர மற்றும் குறுகியகால செயல்பாட்டில் உள்ள அரசுத் துறை விடுதிகள், தனியாா் நிா்வாக விடுதிகள், பள்ளி விடுதிகள் மற்றும் கல்லூரி விடுதிகள் அனைத்தும் உரிமம் பெற்று செயல்படவேண்டும்.

தமிழ்நாடு மகளிா் மற்றும் குழந்தைகளுக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் விடுதிகள் முறைப்படுத்துதல் சட்டம் 2014-இன்படி உரிமம் பெறுவதற்கு மயிலாடுதுறை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 2.9.22-க்குள் கருத்துரு சமா்ப்பிக்க வேண்டும். ஒரு வாரத்துக்குள் விடுதி உரிமையாளா்கள் மாவட்ட சமூகநல அலுவலகத்தில்; பெயா் மற்றும் விவரங்களை தெரிவிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் உரிமம் பெறவில்லையெனில் அரசு விதிமுறைகளின்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், 3-264, குமரன் தெரு, சீனிவாசபுரம், மயிலாடுதுறை-1. தொலைபேசி எண்: 04364-212429 என்ற முகவரியில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது கைப்பேசி மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

அறிவுரை லட்சுமி!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

SCROLL FOR NEXT