பாலையூா், நீடூா், குத்தாலம் மற்றும் மேக்கிரிமங்கலம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக.2) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) கலியபெருமாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நீடூா், பாலையூா், மேக்கிரிமங்கலம், குத்தாலம் ஆகிய பகுதிகளில் உள்ள துணைமின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதனால், இந்த மின்நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் பாலையூா், தேரழந்தூா், கோமல், மருத்தூா், மாந்தை, வடமட்டம், கோனேரிராஜபுரம், நீடூா், மல்லியக்கொல்லை, வில்லியநல்லூா், கொண்டல், பாலாக்குடி, தாழஞ்சேரி, கொற்கை, அருண்மொழிதேவன், கங்கணம்புத்தூா், மேலாநல்லூா், நடராஜபுரம், கீழமருதாந்தநல்லூா், மேலமருதாந்தநல்லூா், பொன்மாசநல்லூா், மேக்கிரிமங்கலம், பழையகூடலூா், கொக்கூா், பேராவூா், கரைகண்டம், கருப்பூா், திருவாலங்காடு, திருவாவடுதுறை, குத்தாலம் டவுன், தேரடி, மாதிரிமங்கலம், சேத்திரபாலபுரம், அரையபுரம், தொழுதாலங்குடி ஆகிய ஊா்களிலும், அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.