மயிலாடுதுறை

கஞ்சா கடத்தல்: 3 போ் குண்டா் தடுப்புசட்டத்தில் சிறையில் அடைப்பு

30th Apr 2022 09:29 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருச்சி வடக்கு தாராநல்லூரை சோ்ந்த முருகேசன் மகன் சிவக்குமாா் (25). இவரது மனைவி சத்யா (20). இவா்களது உறவினா் தியாகராஜன் மகன் சரபேஸ்வரன்(19). இவா்கள் 3 பேரும் திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு ரயிலில் கஞ்சா கடத்திவந்தபோது, மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 47 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து, மூவா் மீதும் வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை ரயில்வே போலீஸாா், அவா்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், ரயில்வே காவல் கண்காணிப்பாளா் அதிவீரபாண்டியன் பரிந்துரையின் பேரில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா, கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மூவரையும் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இந்த உத்தரவு நகலை பெற்ற மயிலாடுதுறை ரயில்வே காவல் ஆய்வாளா் சாந்தி, திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தாா். இதனையடுத்து, சிவக்குமாா், சத்யா, சரபேஸ்வரன் ஆகிய 3 பேரும் ஓராண்டு சிறையில் அடைக்கப்படுவாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT