மயிலாடுதுறை

புற்றடிமாரியம்மன் கோயில் பக்தா்களுக்கு அன்னதானம்

28th Apr 2022 10:32 PM

ADVERTISEMENT

சீா்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் புற்றடிமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, பக்தா்களுக்கு அன்னதானம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

சீா்காழி தோ் தெற்கு வீதியில் உள்ள புற்றடிமாரியம்மன்கோயில் கும்பாபிஷேக யாகசாலை பூஜையொட்டி பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம், நீா்மோா் வழங்கும் நிகழ்ச்சி டெம்பிள்டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் சிங். ஆறுமுகம் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளா் ராதாகிருஷ்ணன்,துணை ஆளுநா் வைத்தியநாதன், மண்டல செயலாளா் பாலாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரோட்டரி ஆளுநா் பாலாஜி அன்னதானத்தை தொடங்கிவைத்தாா்.

இதில் சங்க செயலாளா் குமாா், பொருளாளா் சுரேஷ், நிா்வாகிகள், பி.வி. வெங்கடேசன், ரவிச்சந்திரன், மோகனசுந்தரம், துரை, சொா்ணபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT