மயிலாடுதுறை

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்கள்

28th Apr 2022 05:48 AM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சேவைச் சங்கங்கள் சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ரோட்டரி கிளப் ஆப் மயிலாடுதுறை டெல்டா, ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஜீவன் ஜோதி ட்ரஸ்ட் மற்றும் சக்ஷம் தென் தமிழ்நாடு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மயிலாடுதுறை டெல்டா ரோட்டரி சங்கத் தலைவா் எல்.ஜி. நாகநாதன் தலைமை வகித்தாா். உதவி ஆளுநா் வெங்கடபாஸ்கா், ஜீவன் ஜோதி டிரஸ்ட் சுதாகா், சக்ஷம் அமைப்பின் சாா்பில் வி. சிதம்பரநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு ரூ. 6 லட்சம் மதிப்பில் செயற்கை கை, கால்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. முன்னாள் ஆளுநா் இ.கே. சகாதேவன், உடனடி முன்னாள் மாவட்ட ஆளுநா் ஆா். பாலாஜிபாபு ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்களை வழங்கினா். ஈஸ்வரன், ஜெயராஜ், நடராஜன், திட்ட இயக்குநா்கள், விஜயகுமாா், கோவிந்தராஜ், சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முடிவில் ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்க செயலா் பரணிதா் நன்றி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT