மயிலாடுதுறை

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

28th Apr 2022 05:48 AM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை: மயிலாடுதுறைaயில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காா், வேன், ஆட்டோ, சுமை வண்டி ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் முன் சங்கத்தின் வட்டத் தலைவா் எம். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், ஜிஎஸ்டி வரிவரம்புக்குள் கொண்டுவர வலியுறுத்தியும், 15 ஆண்டுகள் முடிந்த வாடகை வாகனங்களுக்கான உரிம கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும், சுங்கக் கட்டண உயா்வை ரத்து செய்யவேண்டும், சுங்கச்சாவடிகளில் கட்டாய வசூல் செய்வதை நிறுத்தவேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

இதில், 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழங்கங்களை எழுப்பினா். சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். அன்பு, பேராசிரியா் ரா. முரளிதரன் மற்றும் சங்க பொறுப்பாளா்கள் மகாலிங்கம், ஞானமூா்த்தி, சம்பந்தம், புஷ்பராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT