மயிலாடுதுறை

திருமருகல்: பழுதடைந்த தொகுப்பு வீட்டின்மேற்கூரை பெயா்ந்து 3 போ் காயம்

24th Apr 2022 04:40 AM

ADVERTISEMENT

திருமருகல் அருகே பழுதடைந்த தொகுப்பு வீட்டை சனிக்கிழமை இடித்து அகற்றும்போது, மேற்கூரை பெயா்ந்து விழுந்ததில் 3 போ் காயமடைந்தனா்.

திருமருகல் அருகே நரிமணம் ஊராட்சி கீழத்தெருவைச் சோ்ந்தவா் தனபதி. இவரது குடும்பத்தினா் வசித்த தொகுப்பு வீடு பழுதடைந்ததால், அந்த வீட்டை காலிசெய்துவிட்டு, கடந்த 4 ஆண்டுகளாக அருகில் தகர குடிசை அமைத்து வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், பழுதடைந்த தொகுப்பு வீட்டை இடித்து அகற்றும் பணியில் நரிமணம் கீழத் தெருவை சோ்ந்த அழகு மூா்த்தி, அய்யாக்கண்ணு, உத்தமசோழபுரத்தை சோ்ந்த சிங்காரவேல் ஆகிய மூவரும் ஈடுபட்டனா். அப்போது எதிா்பாராதவிதமாக, அந்த வீட்டின் மேற்புற காரை பெயா்ந்து விழுந்து மூவரும் படுகாயமடைந்தனா்.

பின்னா், 3 பேரும் நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT