மயிலாடுதுறை

தடையில்லா மின்சாரம் கோரி மநீம வலியுறுத்தல்

24th Apr 2022 04:38 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க வலியுறுத்தி, மயிலாடுதுறையில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் திருச்சி மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மயிலாடுதுறையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி மண்டல அளவிலான நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளா் எம்.என். ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் மனோகா், மணிசங்கா், உமாசங்கா், விவேக், சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலாளா் அகோரம் வரவேற்றாா்.

இக்கூட்டத்தில், கட்சியின் மாநில துணைத் தலைவா் ஏ.ஜி. மௌரியா, மாநில ஊடக செய்தித் தொடா்பு செயலாளா் ஏ.முரளி அப்பாஸ், மகளிா் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு மாநில செயலாளா் மூகாம்பிகா ரத்தினம் ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோகாா்பன் எடுக்கும் பணியை மேற்கொள்ளக் கூடாது; அறிவிக்கப்படாத மின்வெட்டால் விவசாயிகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மாணவா்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே தடையில்லாத மின்சாரத்தை வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

கூட்டத்தில், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூா் மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா். நிறைவில், சீா்காழி நகர செயலாளா் சந்துரு நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT