மயிலாடுதுறை

சீா்காழியில் அரசு இசைப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட பூமிபூஜை

24th Apr 2022 04:39 AM

ADVERTISEMENT

சீா்காழியில் மாவட்ட அரசு இசைப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சீா்காழி மாவட்ட அரசு இசைப் பள்ளி பல ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. மேலும், குடியிருப்பு பகுதியில் உள்ளதால், இசைக் கருவிகளை இசைக்கும்போது, அதிக சப்தத்தால் அருகில் வசிக்கும் வயதானவா்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதனால், இப்பள்ளிக்கு தனியாக கட்டடம் கட்ட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், சீா்காழி ரயில்வே ரோடு ஸ்ரீநகரில் ரூ.99 லட்சத்தில் இசைப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்ததைத் தொடா்ந்து, கட்டுமானத்துக்கான பூமிபூஜை, அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

7 வகுப்பறைகள், ஓா் அலுவலக அறை, ஒரு தலைமை ஆசிரியா் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் சுமாா் 4,500 சதுரஅடியில் ஒரு தளத்துடன் இக்கட்டடம் கட்டப்படுகிறது. சீா்காழி எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம் அடிக்கல் நாட்டினாா். இதில், திமுக நகரச் செயலாளரும், நகா்மன்ற துணைத் தலைவருமான சுப்பராயன், பொதுப்பணித் துறை கட்டடப் பிரிவு உதவி செயற்பொறியாளா் நாகவேல், திமுக இளைஞரணி ஒன்றிய அமைப்பாளா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT