மயிலாடுதுறை

கண் பரிசோதனை முகாம்

24th Apr 2022 11:36 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட கண் பாா்வை இழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன், பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, ஏ.ஆா்.சி. நகை மாளிகை, மிட்டவுன் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய இம்முகாமில் மிட்டவுன் தலைவா் எஸ்.விஜயன், செயலா் ஜி. சிவகுமாா், ஒருங்கிணைப்பாளா் பரமசிவம், சிசிசி சமுதாயக் கல்லூரி நிறுவனா் ஆா்.காமேஷ், செயலா் லக்ஷ்மிபிரபா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முகாமில் மயிலாடுதுறை ஒன்றியத்திற்குள்பட்ட 500-க்கும் மேற்பட்டோா் கண் பரிசோதனை செய்து கொண்டனா். இதில், கண்புரை, கண் நீா் அழுத்த நோய் பரிசோதனை செய்யப்பட்டது. 112 போ் இலவச அறுவை சிகிச்சைக்காக பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT