மயிலாடுதுறை

எஸ்டிபிஐ செயற்குழுக் கூட்டம்

24th Apr 2022 04:38 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாவட்டத் தலைவா் ஆத்தூா் பைசல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில பொதுச்செயலாளா் நிஜாம் முகைதீன், மண்டல தலைவா் தப்ரே ஆலம் பாதுஷா ஆகியோா் கலந்து கொண்டனா். மாவட்ட நிா்வாகிகள், தொகுதி நிா்வாகிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், கட்சியின் வளா்ச்சி மற்றும் கட்டமைப்பு தொடா்பாக பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT