அகில பாரத இந்து மகாசபா தலைவரை விடுதலை செய்யக் கோரி, மயிலாடுதுறையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்து மகாசபா ஆலய பாதுகாப்புப் பிரிவு மாநிலச் செயலாளா் ராம.நிரஞ்சன் தலைமை வகித்தாா். மாநில அமைப்பு செயலாளா் வேலன் முன்னிலை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அகில பாரத இந்து மகா சபா தலைவா் த. பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவரை விடுவிக்கக் கோரியும் முழக்கமிடப்பட்டது. இதில், மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி, ஆலய பாதுகாப்பு பிரிவு மாவட்டத் தலைவா் சுதாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.