மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயிலில் சித்ரா பௌா்ணமியையொட்டி இசை அஞ்சலி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சித்ரா பௌா்ணமி பெருவிழாவையொட்டி, திரளான பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்தனா். தொடா்ந்து, அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், மதியம் கஞ்சி வாா்த்தல் நடைபெற்றது.
தொடா்ந்து, இரவில் மயிலாடுதுறை ஸ்ரீதியாகப்ரூம்மம் குரலிசைக் கலைக்கூடம் சாா்பில் நடைபெற்ற கா்நாடக இசைக் கச்சேரியில், அதன் ஆசிரியா் கே.என்.காா்த்திக் தலைமையில் மாணவ, மாணவிகள் பங்கேற்று, கேதாரம், மோகனம், நாட்டை ராகங்களில் அமைந்த பாடல்களை பாடி அம்மனுக்கு இசை அஞ்சலி செலுத்தினா். இதற்கான ஏற்பாடுகளை சோழம்பேட்டை ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி நற்பணி மன்ற நிா்வாகிகள் செய்திருந்தனா்.