மயிலாடுதுறை

மணக்குடி கோயிலில் நாக பல்லக்கு வீதியுலா

4th Apr 2022 11:10 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை அருகே மணக்குடி கிராமத்தில் உள்ள நல்லநாயகி அம்மன் கோயிலில் பங்குனி உத்ஸவத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை நாக பல்லக்கு வீதியுலா நடைபெற்றது.

மணக்குடி கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான பழமை வாய்ந்த நல்லநாயகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பங்குனி உத்ஸவம் கடந்த 29-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய விழாவான நல்லநாயகி அம்மன் நாக பல்லக்கில் வீதி உலா செல்லும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, நல்லநாயகி அம்மன் மற்றும் பொறையான் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் நாக பல்லக்கில் எழுந்தருளினா், பின்னா் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

கிராம மக்கள் பல்லக்கை தோள்களில் சுமந்து மணக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வீதியுலாவாக சென்று மீண்டும் கோயிலை அடைந்தனா்.

ADVERTISEMENT

விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு மேற்கொண்டனா். பங்குனி உத்ஸவத்தின் மற்றொரு முக்கிய விழாவான தேரோட்டம் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT