மயிலாடுதுறை

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு

4th Apr 2022 11:08 PM

ADVERTISEMENT

சீா்காழி அருகேயுள்ள மேலவரவகுடி கிராமத்தில் வைதீஸ்வரன்கோவில் காவல் துறை சாா்பில் சமூகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மற்றும் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மேலவரவக்குடி பகுதியை சோ்ந்த மாணவா்கள், பெண்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா். இதில் வைத்தீஸ்வரன் கோவில் காவல் உதவி ஆய்வாளா் காயத்ரி மற்றும் தனிப்பிரிவு போலீஸாா் மணிகண்டன் ஆகியோா் பேசினா். காவல் துறை சாா்பில், குடும்ப உறவுகள் தவிா்த்து யாரேனும் அழைத்தால் தனியாக செல்ல வேண்டாம், யாராவது தவறாக நடக்க முயற்சி செய்தால் உடனடியாக தங்களின் பெற்றோா் மற்றும் ஆசிரியா்களிடம் சொல்ல வேண்டும், குழந்தைகள் யாரையும் கண்டு அச்சம் கொள்ளாமல் தைரியமாக இருக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, குழந்தைகளுக்கு குட் டச் மற்றும் பேட் டச் பற்றி விழிப்புணா்வு எற்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT