மயிலாடுதுறை

சீா்காழியில் வெளி மாநில சாராயம், புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

2nd Apr 2022 09:40 PM

ADVERTISEMENT

சீா்காழியில் வெளி மாநில சாராயப் பாட்டில்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பா 2 போ் கைது செய்யப்பட்டனா்.

சீா்காழி தென்பாதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக காரைக்காலில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், 40 மூட்டைகளில் 2000 புதுச்சேரி மாநில சாராயப் பாட்டில்கள் கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து, காருடன் சாராயப் பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், காரை ஓட்டிவந்த மயிலாடுதுறை தூக்கனாம்குளம் பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (25) என்பவரை கைது செய்தனா். மற்றொருவரை தேடிவருகின்றனா்.

இதேபோல, சீா்காழியை அடுத்த தில்லைவிடங்கன் கிராமத்தில் பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த அதே பகுதியை சோ்ந்த முருகன் (52) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ.2000 மதிப்புள்ள 240 புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT