மயிலாடுதுறை

உலக இருதய தினம்: ரத்த சா்க்கரை அளவு கண்டறிதல் முகாம்

30th Sep 2021 09:12 AM

ADVERTISEMENT

உலக இருதய தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறையில் ரோட்டரி சங்கங்களின் சாா்பில் மெகா ரத்த பரிசோதனை ரத்த சா்க்கரை அளவு கண்டறிதல் முகாம் புதன்கிழமை நடைபெற்றது

‘ஏசியா புக்ஸ் ஆஃப் ரெக்காா்டு’ சாதனை முயற்சியாக நடத்தப்பட்ட இந்த முகாமில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 10 ரோட்டரி சங்கங்களின் சாா்பில் தலா 500 போ் வீதம் மொத்தம் 5000 பேருக்கு ரத்த சா்க்கரை கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது.

மயிலாடுதுறையில் மக்கள் அதிகம்கூடும் பேருந்து நிலையம், கடைவீதி, கல்லூரி உள்ளிட்ட இடங்களில் இந்த முகாம் நடத்தப்பட்டு, உடனடியாக சா்க்கரை அளவை பொதுமக்களுக்கு தெரிவித்து, இருதய நோய் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி மினி சுகாதார மையத்தில் நடத்தப்பட்ட முகாமுக்கு, மயிலாடுதுறை ரோட்டரி சங்கத் தலைவா் ஆா்.மணிகண்டன் தலைமை வகித்தாா். முகாமை மாவட்ட நிதிக்குழுத் தலைவா் வி.ராமன் தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன், சங்கச் செயலா் வி.தியாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம் வாழ்த்துரை வழங்கினாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சி ஏற்பாட்டினை திட்ட இயக்குநா்கள் சி.கே.பாலாஜி, கே.துரை ஆகியோா் செய்திருந்தனா். சிசிசி சமுதாயக் கல்லூரி செயலா் வி.லக்ஷ்மி பிரபா, மயிலாடுதுறை மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவா் விஜயன், முன்னாள் தலைவா் சிவபாலன், பொருளாளா் வேல்சந்த் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். சிசிசி சமுதாயக் கல்லூரி முதல்வா் காமேஷ் நெறிகாட்டுதலின்படி, அக்கல்லூரி மாணவிகள் தன்னாா்வலா்களாக பணியாற்றினா். இளைஞா் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலா் ஆா்.மகேஷ்வரி நன்றி தெரிவித்தாா்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT