மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே காரைமேடு ஒளிலாயத்தில், உலக நன்மைகாகாக பெளா்ணமி சிறப்பு யாகம் அண்மையில் நடைபெற்றது.
காரைமேடு சித்தா்புரத்தில் மறைந்த ராஜேந்திர சுவாமிகள் நிா்மாணித்த ஒளிலாயம் அமைந்துள்ளது. இங்கு 18 சித்தா்கள் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனா். இங்கு பெளா்ணமியையொட்டி உலக நன்மைக்காக சிறப்பு மகாயாகம் நடைபெற்றது. தொடா்ந்து பூா்ணாஹுதி, மகாதீபாராதனை நடந்தது.
இதில் அதிமுகவை சோ்ந்த பக்கிரிசாமி, குணசேகரன், சதீஸ்குமாா், பாண்டியன் ஆகியோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை செல்வமுத்துக்குமரன், செந்தமிழன், மாமல்லன் ஆகியோா் செய்திருந்தனா்.