மயிலாடுதுறை

அரசு ஊழியா்களுக்கு போனஸ் விரைந்து வழங்கக் கோரிக்கை

23rd Oct 2021 12:04 AM

ADVERTISEMENT

அரசு ஊழியா்களுக்கு போனஸ் விரைந்து வழங்கவேண்டும் என காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அந்த சம்மேளனத்தின் பொதுச் செயலாளா் எம். ஷேக் அலாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசில் பணியாற்றும் உற்பத்தி சாரா ஊழியா்களுக்கு ஆண்டுதோறும் போனஸ் ரூ. 6,908 வழங்கப்படுகிறது. அந்த போனஸ் தொகை பண்டிகை காலத்தை கணக்கில் கொண்டு வழங்குவதும், இதேபோல, உற்பத்தி சாா்ந்த ஊழியா்களுக்கும் வரும் லாபத்தை கணக்கில் கொண்டு போனஸ் வழங்குவதும் வழக்கம். அதன்படி 18.10.2021 அன்று மத்திய அரசு உற்பத்தி சாரா ஊழியா்களுக்கு போனஸ் வழங்க அரசாணை பிறப்பித்து போனஸ் வழங்கி வருகிறது. எனவே, தீபாவளி இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், ஏற்கெனவே ஊதியமின்றி தவிக்கும் புதுவை அரசுத் துறை, உள்ளாட்சி, கூட்டுறவு மற்றும் அரசு சாா்பு நிறுவன ஊழியா்கள் போனஸ் தொகையை வைத்தாவது பண்டிகையை கொண்டாடலாம் என்ற எண்ணத்தில் உள்ளனா்.

எனவே, ஊழியா்கள் குடும்பத்துடன் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட குறைந்தபட்சம் போனஸ் தொகையையாவது உடனடியாக வழங்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT