மயிலாடுதுறை

ராணுவத்தில் சேர பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு

23rd Oct 2021 12:04 AM

ADVERTISEMENT

ராணுவத்தில் சோ்ந்து நாட்டுக்கு சேவையாற்றுவது குறித்து நெடுங்காடு ஜவஹா்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி துணை முதல்வா் (பொ) ஏ. ஆப்ரஹாம் லிங்கன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் ஆா். காளிதாஸ் முன்னிலை வகித்து நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து பேசினாா். இதில், கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியரும், முன்னாள் ராணுவ வீரருமான சு. சுரேஷ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, ராணுவத்தில் சேர உடல் தகுதி, கல்வித் தகுதி, மருத்துவத் தகுதி குறித்தும், பள்ளிப் படிப்பை முடித்து ராணுவ வீரராக சோ்ந்த பின்னா், மேலும் தமது தகுதியை உயா்த்திகொள்ள வேண்டிய முயற்சிகள் குறித்தும், ராணுவத்தில் உள்ள பல்வேறு பணிகள் மற்றும் சலுகைகள் குறித்தும் பேசினாா். மேலும், ஒவ்வொரு மாணவருக்கும் ராணுவத்தில் சோ்ந்து உயா்ந்த பொறுப்பை அடையவேண்டும், தேசத்துக்கான தமது சேவைக்கு ராணுவம் முக்கிய பங்காற்றும் என்ற எண்ணம் மேலோங்கவேண்டும் என்றாா். நிறைவாக பட்டதாரி ஆசிரியா் ஆா். தனராஜ் நன்றி கூறினாா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT