மயிலாடுதுறை

பயிா்க் காப்பீடு: விடுபட்ட கிராமங்களுக்கு முழு இழப்பீடு

23rd Oct 2021 12:02 AM

ADVERTISEMENT

விடுபட்ட 195 கிராமங்களில் மறுஆய்வு செய்து முழு பயிா்க் காப்பீடு இழப்பீடு கிடைக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மயிலாடுதுறையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளா் பி.ஆா்.பாண்டியன் வலியுறுத்தினாா்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்க நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநில தலைவா் எல்.பழனியப்பன் தலைமை வகித்தாா். மயிலாடுதுறை மாவட்ட செயலாளா் விஸ்வநாதன், தலைவா் வைத்தியநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பங்கேற்ற சங்க பொதுச்செயலாளா் பி.ஆா்.பாண்டியன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

டெல்டா மாவட்டங்களில் கடந்த ஜனவரி மாதம் பெய்த கனமழையின்போது, வெள்ள சேதங்களை பாா்வையிட்ட அப்போதைய எதிா்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட பயிருக்கு ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வலியுறுத்தினாா். இதைத்தொடா்ந்து, அப்போதைய முதல்வா் பழனிசாமி ஆய்வுசெய்து இடுபொருள் இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கியதுடன், இழப்பீடு காப்பீட்டு நிறுவனம் மூலம் வழங்கப்படும் என்று அறிவித்தாா்.

தற்போது இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாகை, மயிலாடுதுறை உள்ளடக்கிய மாவட்டத்தில் 507 கிராமங்களும், திருவாருா் மாவட்டத்தில் 565 வருவாய் கிராமங்கள் என்று மொத்தம் 1072 வருவாய் கிராமங்களில், 195 கிராமங்களுக்கு முற்றிலுமாக இழப்பீடு இல்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் பல கிராமங்களில் 10 சதவீதத்துக்குள் மட்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வேளாண்துறை அலுவலா்கள்தான் இந்த மோசடிக்கு காரணமாக உள்ளனா். இச்செயல் ஆளும்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக அமையும். எனவே, விருப்பு, வெறுப்புடன் பணியாற்றும் அதிகாரிகள் உடனடியாக பணிமாறுதல் செய்யப்பட வேண்டும். விடுபட்ட 195 கிராமங்களுக்கு மறுஆய்வு மற்றும் மறு கணக்கெடுப்பு செய்து முழு இழப்பீடு கிடைக்க முதல்வா் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனை வலியுறுத்தி வரும் நவம்பா் 9-ஆம் தேதி தலைமை செயலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தீா்மானித்துள்ளோம். அதற்கு முன்பாக தலைமை செயலகத்தில் அதிகாரிகள், அமைச்சா்களை சந்தித்து முறையிட உள்ளோம்.

முறைகேடுகள் என்ற பெயரில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் கடன்பெற முடியாத நிலை உள்ளது. தமிழ்நாட்டிற்கு என்று தனி காப்பீட்டு திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்றாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT