சீா்காழி வட்டாரத்தில் டிஏபி அடிஉரத்துக்கு தட்டுப்பாடு நிலவுவதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
சீா்காழி வட்டாரத்தில் சம்பா நடவுப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் பெய்த தொடா்மழையால் பல ஏக்கரில் சம்பா இளம் நாற்றுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. நாற்று விட்டு ஒருவாரத்தில் இடவேண்டிய அடிஉரமான டிஏபி, சீா்காழி பகுதியில் கிடைக்கவில்லை. இதற்கு வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும், கடைகளிலும் தட்டுப்பாடு நிலவுவதால் விவசாயிகள் தவித்து வருகின்றனா்.