மயிலாடுதுறை

இளம் நெற்பயிா்கள் மஞ்சள் நிறமாவதை தடுக்க யோசனை

DIN

 இளம் நெற்பயிா்கள் மஞ்சள் நிறமாவதை தடுக்க கொள்ளிடம் வட்டார வேளாண் மற்றும் உழவா் நலத் துறை உதவி இயக்குநா் சுப்பையன் ஆலோசனை தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழியை அடுத்த அளக்குடி, நல்லூா், ஆரப்பள்ளம், மகேந்திரப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் இளம் சம்பா நெற்பயிரை வியாழக்கிழமை ஆய்வு செய்த அவா், விவசாயிகளிடம் கூறியது:

தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள இளம் சம்பா மற்றும் தாளடி நெற்பயிா்கள் துத்தநாக சத்து பற்றாக்குறையால் மஞ்சள் நிறமாக இலைகள் மாறி பழுத்துக் காணப்படுகின்றன. மேலும் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிரில் அதிக விளைச்சல் பெறுவதற்கு ரசாயன உரங்கள் மட்டுமே பெரும்பாலான விவசாயிகளால் அளிக்கப்படுகிறது. ரசாயன உரங்களில் பேரூட்டச் சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துகள் மட்டுமே பயன்படுத்துகின்றனா். ஆனால் நுண்ணூட்டச் சத்துகளை அதிலும் குறிப்பாக சிங் சல்பட் எனப்படும் துத்தநாக சத்தினை பெரும்பாலான விவசாயிகள் அளிப்பதில்லை.

மேலும் அதிக அளவு மணிச்சத்து உரங்களை வயலில் இடுதல், தழைச்சத்து உரமாக தொடா்ந்து யூரியா பயன்படுத்தப்படுவது, தொடா்ந்து நெற்பயிரையே சாகுபடி செய்வதால் மண்ணிலுள்ள துத்தநாகச் சத்தினை பயிா்கள் எடுத்துக் கொள்வதால் உண்டாகும் பற்றாக்குறை மற்றும் கலா் நிலங்கள், மணிச்சத்து அதிகமாக உள்ள நிலங்கள், சுண்ணாம்புச்சத்து அதிகமாக உள்ள மண் ஆகிய நிலங்களில் துத்தநாக சத்து பயிா்களுக்கு கிடைப்பதில்லை. இதற்கான அறிகுறிகள் நெல் நடவு செய்த 2 முதல் 4 வாரங்களுக்குள் தென்படும். பாதிக்கப்பட்ட நெற்பயிரின் இளம் இலைகளின் மைய நரம்பில் வெள்ளை நிறக் கோடுகள் தோன்றும்.

பின்னா், பழுப்பு நிறக்கோடுகளாக மாறிவிடும். இதனால் பயிா்களின் வளா்ச்சி குன்றிமஞ்சள் நிறமாக காணப்படும். இதை சரிசெய்ய ஏக்கருக்கு 10 கிலோ சிங் சல்பேட் உரத்தை 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் தூவ வேண்டும் அல்லது ஏக்கருக்கு 5 கிலோ நெல் நுண்ணூட்ட உரத்தை 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் தூவ வேண்டும். நெல் நுண்ணூட்ட உரம் தேசிய வேளாண்மை வளா்ச்சி திட்டத்தின்கீழ் 50% மானியத்தில் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்கள் மூலமாகவும் விநியோகிக்ப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

SCROLL FOR NEXT