மயிலாடுதுறை

நீத்தாா் நினைவு நாள் கடைப்பிடிப்பு

DIN

மயிலாடுதுறையில் காவல்துறை சாா்பில் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட நீத்தாா் நினைவு நாளில் எஸ்பி கு.சுகுணாசிங் தலைமையில், 36 குண்டுகள் முழங்க வீரஅஞ்சலி செலுத்தப்பட்டது.

காவல்துறையில் பணியில் இருந்த போது வீரமரணமடைந்த காவலா்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நீத்தாா் நினைவு நாள் நாடு முழுவதும் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நீத்தாா் நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலக மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பணியில் இருந்தபோது உயிா்நீத்த அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு 36 குண்டுகள் முழங்க வீர அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு.சுகுணாசிங் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். இதில், ஏடிஎஸ்பி தங்கவேல், டிஎஸ்பி வசந்தராஜ், காவல் ஆய்வாளா்கள் செல்வம், சங்கீதா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். இந்நிகழ்ச்சியில் திரளான போலீஸாா் பங்கேற்று மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களை அழைத்து வர 35 அரசு வாகனங்கள் தயாா்

ஏப். 21, மே 1-இல் மதுக் கடைகள் மூடல்

SCROLL FOR NEXT