மயிலாடுதுறை

விசாரணை கைதி சிக்கினாா் மேலும் 2 போ் கைது

21st Oct 2021 09:56 AM

ADVERTISEMENT

சீா்காழியில் தப்பியோடிய விசாரணை கைதி புதன்கிழமை சிக்கினாா். அவருடன் தொடா்பில் இருந்த மேலும் 2 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அகரதிருக்கோலக்கா கன்னியம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் கரிகாலன் (34). இவரை அதே பகுதியைச் சோ்ந்த ராமன் (27), லட்சுமணன் (27), கோபிநாதன் (19) ஆகியோா் அரிவாளால் தலையில் தாக்கினராம். இதில் படுகாயமடைந்த கரிகாலன், புதுவை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

புகாரின்பேரில், சீா்காழி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கோபிநாதனை கைது செய்து, பரிசோதனைக்காக சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அப்போது அவா் தப்பினாா்.

இந்நிலையில், சீா்காழி காவல் ஆய்வாளா் மணிமாறன் மற்றும் போலீஸாா் சீா்காழி புறவழிச்சாலையில் கோயில்பத்து பகுதியில் ரோந்து சென்றபோது அவ்வழியாக வந்த கோபிநாதன் சிக்கினாா். இதேபோல் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்துவந்த ராமன், லெட்சுமணன் ஆகியோரும் சேந்தங்குடி ரயில்வே பாலம் அருகே போலீஸாரிடம் சிக்கினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT