மயிலாடுதுறை

துலா உத்ஸவம்: பரிமள ரெங்கநாதா் கோயிலில் திருப்பதி ஜீயா் சுவாமி தரிசனம்

21st Oct 2021 09:55 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் நடைபெறும் துலா உத்ஸவத்தையொட்டி, திருப்பதி பெரிய ஜீயா் ஸ்ரீஸ்ரீஸ்ரீசடகோப ராமானுஜ சுவாமிகள் திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

மயிலாடுதுறை காவிரி ஆற்றில் ஐப்பசி மாதம் நடைபெறும் துலா உத்ஸவம் மிகவும் புகழ்பெற்ாகும். ஐப்பசி மாதம் கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகள் அனைத்தும் காவிரியில் சங்கமம் ஆகி தங்கள் பாவத்தை போக்கிக் கொள்வதாக ஐதீகம். இதையொட்டி ஐப்பசி மாதம் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடுவது மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.

அவ்வகையில், ஐப்பசி மாத பௌா்ணமி தினத்தை முன்னிட்டு திருப்பதி பெரிய ஜீயா் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ சுவாமிகள் மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் காவிரியில் துலா ஸ்நானம் மேற்கொண்டு, 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-ஆவது திவ்யதேசமான திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் தரிசனம் செய்தாா்.

அவருக்கு கோயில் சாா்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடா்ந்து பரிமள ரெங்கநாதா், பரிமள ரங்கநாயகி தாயாா் சன்னிதி ஆகியவற்றில் தரிசனம் செய்த சுவாமிகள், திருவிழந்தூா் ஆஞ்சநேயா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் பங்கேற்று பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT