மயிலாடுதுறை

சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊதியம் வழங்கக் கோரி தற்காலிக செவிலியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

18th Oct 2021 02:32 PM

ADVERTISEMENT

சீர்காழி அரசு மருத்துவமனையில் தற்காலிக செவிலியர்கள் ஊதியம் வழங்கக் கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அரசு மருத்துவமணையில் கரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்ற கடந்த 6 மாதங்களுக்கு முன் தற்காலிக மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக டெக்னீஷியன் உட்பட 28 பேர் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 6 மாதமாக ஊதியம் வழங்கபடவில்லை என கூறப்பபடுகிறது. 

இந்நிலையில் இன்று காலை பணிக்கு வந்த 28 பேருக்கும் உரிய பணி வழங்கபடவில்லையாம். இதனால் அதிருப்தியடைந்தவர்கள் தங்களுக்கு ஊதியத்தை வழங்கக் கோரியும், தொடர்ந்து பணி வழங்க கோரியும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே  போல் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் சுகாதார பணியாளர்களை இன்று முதல் 12 மணி நேரம் வேலை செய்ய மருத்துவமனை நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க- ஸ்காட்லாந்திடம் தோற்றது ஏன்?: வங்கதேச அணி கேப்டன் பதில்

அதனை ஏற்க மறுத்து சுகாதார பணியாளர்கள் தங்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் தங்களை 12 மணி நேரம் பணியாற்ற வலியுறுத்துவதாகவும் இல்லாவிடில் வேலை விட்டு போங்கள் என அலட்சியமாக பேசுவதாகவும் குற்றம்சாட்டிய பணியாளர்கள் வழக்கமான பணியை வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த இரண்டு உள்ளிருப்பு போராட்டம் மற்றும் பணிப் புறக்கணிப்பால் அரசு மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் மற்றும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் பெரிதும் பாதிப்பு அடைந்தனர்.

Tags : protest Sirkazhi Government Hospital
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT